இன்று நான் குறிப்பிடபோவது ஒருவரால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று பதினைன்தாயிரம் பேரை எட்டும் ஒரு FACEBOOK PAGE. பல-பல facebook pages இருக்கின்றன, அதில் முக்கால்வாசி கேலி,கிண்டல்,சினிமா,பாடல்கள்,வர்த்தகம் இதன் தொடர்பாகவே நிறைய பக்கங்கள் வளர்ந்து வருகின்றன. மேலும் இத்தகைய பக்கங்களை பிரபலபடுத்தி பணம் ஈட்டும் செயலும் நடந்து வருகின்றன. இன்று நான் குறிப்பிடபோவது சிங்கப்பூர் வேலை செய்வோர் சங்கம்.!!! SVSS
பல சங்கங்கள் facebook-கில் இருக்கின்றன, ஆனால் SVSS திரு.இந்திரன் மூலமாய் செயல்பட்டு சிங்கப்பூரில் இருகின்ற வேலை வாய்ப்புகளை இந்த facebook page வாயிலாக தெரிவிப்பவர். ஆரம்பத்தில் திரு.இந்திரன் மட்டுமே ஆங்காங்கே காணப்படும் வேலைவாய்ப்புகளை ஒன்று திரட்டி தினமும் வேலை இல்லாத நம் இளைஞர்களுக்கு தெரிவிப்பார், மேலும் சில தமிழ் இளைஞர்கள் சேர்ந்து கூட்டாக இந்த நடவடிக்கையை தொடர்ந்தனர். இதன் விளைவு வேலை இல்லாத பலருக்கு வேலை கிடைத்தது. இதில் முக்கியமாக பயனடைந்தவர்கள் மலேசிய வாழ் தமிழ் மக்கள்.
மலேசியாவிலிருந்து தினமும் இலட்சகணக்கானோர் தினமும் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்கிறார்கள். சிலர் சிங்கப்பூரில் வேலைக்காக முயற்சித்து சோர்ந்து போனவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி வேலைக்காக தினமும் ஒவ்வொரு கம்பெனி-யாக ஏறி இறங்குவோர் பலர். இவர்களுக்கு SVSS page மிகவும் பயனுள்ளதாய் அமைந்தது. சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய மாநிலம் ஜொகூர் பாரு, இந்த மாநிலத்தில் அமைத்திருக்கும் "புஸ்பநேசம் இல்லம்" இந்த இல்லம் கை விடப்பட்ட சிறார்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், ஆதரவற்ற பிள்ளைகளை காப்பாற்றும் ஒரு கருணை இல்லம்.
இங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு உணவு,கல்வி,உடைகள் என அக்கம் பக்கத்தில் இருந்து குறைந்த அளவே ஆதரவு வழங்கப்படுகின்றன. மேலும் இங்கு வளரும் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எதாவது கை தொழிலை கற்றுக்கொள்ளவும், கணினி அறிவை வளர்த்து கொள்ளவும் SVSS நண்பர்கள் வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனர். SVSS Brothers WeChat மூலமாக நன்கொடைகளை திரட்டி கடந்த 03-03-2014 புஸ்பநேசம் இல்லத்திற்கு வருகை தந்து அவர்களின் முதல் சேவையாக அன்னதானம் வழங்கியுள்ளனர். அங்கு வாழும் பிள்ளைகளுக்கு 10கணினிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் உறுதி தெரிவித்தனர். மேலும் முடிந்த இதர வசதிகளையும் செய்து கொடுக்க குறிப்பிட்ட கருணை இல்லாததோடு கைக்கோர்தனர்.
Facebook, Wechat இதில் தேவை இல்லாமல் நேரத்தை செலவழிக்கும் இளைஞர்கள் மத்தியில் SVSS நண்பர்கள் பிறருக்கு உதவி செய்ய சமூக வலைதளங்களில் ஒன்று திரண்டு தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள வேலை வேலை என்று ஓடுகிறோம், ஆனால் SVSS அப்படியே போகும்வழியில் நாலு பேருக்கு தங்களால் முடிந்த உதவியை செய்துகொண்டே செல்கிறார்கள். நம்மிடம் இருக்கும் அனைத்தையும் கொண்டு மற்றவருக்கு உதவுவதை விட, நம்மிடம் இருப்பதில் கொஞ்சமாவது கொடுத்து பிறருக்கு உதவுவோம் என்று இன்றைய என் பதிவை நிறைவு செய்கிறேன். SVSS உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை கூறிகொள்கிறேன் மேலும் உங்கள் சேவை வெற்றிகரமாக நீடிக்க என் வாழ்த்துக்கள்.
-mcboy
svss brothers vaaltukkal :d
ReplyDeleteநல்லவர்கள் என்றும் போற்ற படுவார்கள்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete(k) (k) (k) (k) (k) (k) (k)
ReplyDelete(h) (h) (h) (h) (h) (h)
ReplyDeleteசிங்கப்பூர் வேலை செய்வோர் சங்கம் பக்கத்தை இணைத்து கொண்டேன்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
திரு.இந்திரன் அண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் எல்லாம் நல்லதாய் அமைய இறைவனை வேண்டுகிறேன் திரு .முருசந்துரு அண்ணா உங்களது சேவைக்கு நன்றி
ReplyDeleteஜெயா பிரகாஷ் உங்கள் வாழ்துக்கள் திரு.இந்திரன் அவருக்கே ஒலித்தாகட்டும்.
Deleteதனபாலன், ஜெயா பிரகாஷ் உங்கள் இருவருக்குமே எனது நன்றிகள். (h)
ReplyDeleteThanks
ReplyDelete