Breaking News
Loading...

Info Post
இன்றைய பதிவு Android கைபேசி சாதனங்களை பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Mobile, Tab பயன்படுத்துவோர் இதன்வழி உங்கள் சாதனங்களின் பாதுகாப்பின் பயன்பாட்டை மேலும் ஒருபடி மேலே உறுதி செய்துகொள்ளலாம். இங்கு குறிப்பிடும் முறையை கொண்டு நேரே Google Play store சென்று உங்கள் Android Device, tap, mobile எங்கே இருக்கிறது, கடைசியாய் எங்கே இருந்தது என்று Google Play store மூலம் கண்டறியலாம். வேறு எந்த ஒரு APPLICATION-களும் தேவை இல்லை.

முதலில் உங்கள் Android சாதனத்தின் SECURITY - Device Administrators சென்று பார்த்தால் (Allow Android Device Manager to lock or erase a lost device) இப்படி எழுதபட்டிருக்கும், வேருமுறையில் இருந்தாலும் அர்த்தங்கள் ஒன்றுதான். குறிப்பிடப்பட்டவை என்னவென்றால் உங்கள் device காணமல் அல்லது திருட பட்டிருந்தாலோ உங்கள் data-க்களை அழிக்கவோ, அல்லது lock செய்யகூடிய அனுமதி கொடுப்பதே ஆகும்.

செய்முறை வழிமுறை

  • Google Play Store செல்லவும் 
  • எந்த E-mail கணக்கு மூலமாக உங்கள் android சாதனத்தில் Google play தொடங்கி பட்டதோ அதே ஈமெயில் குறிப்பிடவும்.
  • ஆகா வலதுபுறம் மேலே கிளிக் செய்யவும்.
  • Setting கிளிக் செய்து அதன் மூலமாக மேலும் முன்னேறவும் 
  • இப்போது உங்களின் Android Device எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை கணக்கிடும்.


  • கீழே உள்ள என்னுடைய கைபேசி எங்கே உள்ளது எவ்வளவு தூரத்தில் மற்றும் இறுதியாய் எங்கே பயன்படுத்தினேன் என்பதினை துல்லியமாக தெரிவிக்கின்றது.


  • இதில் மேலும் இருக்கும் இன்னொரு தேர்வு (RING)
  • இப்போது அந்த RING சற்று கிளிக் செய்தால், உங்கள் கையி பேசி 5நிமிடங்களுக்கு தானே ஒலிக்கும்.


ஆரம்பத்திலே Lock/Erase-களை தெரிவித்துள்ளேன். உங்கள் Android Device-களில் உள்ள தேர்வை  நீங்கள் கிளிக் செய்திருந்தால் இப்போது Setup Lock&Erase பயன்படுத்தி இங்கிருந்து காணமல் போன உங்கள் Device data க்களை Lock&Erase செய்யலாம்.
முயற்சிக்கலாம், ஆனால் தேவையான நேரத்தில் பயன்படுத்துவதே சிறந்தது. ஆனால் RING செய்து எப்போது வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.

author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

2 comments:

  1. விளக்கங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  2. வணக்கம் தனபாலன், நீங்களே என் எல்லா பதிவுகளிலும் எனக்கு உற்சாகம் தருகிறீர்கள். நன்றி ஐயா!

    ReplyDelete

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)