நேரே கதைக்கு வருகிறேன், இரண்டு நண்பர்கள் ஒருவர் கதிர் இன்னொருவர் வெங்கட். கதிர் அம்மா மாரடைப்பால் இறந்த செய்தியை அவனிடன் சொல்ல ஓடி வந்த வெங்கட் சற்று நேரம் பொறுத்துக்கொண்டான், காரணம் அவன் நண்பன் கதிர் இப்போதுதான் மதிய உணவு உண்டு கொட்டிருக்கிறான்.
காலையிலிருந்து எதுவுமே உண்ணாமல் இப்போதுதான் உண்ணும் அவன் நண்பனிடம் இந்த அதிர்சியான செய்தியை சொல்ல முடியவில்லை. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை, வெங்கட் விரைவாக கதிர் உடனே செல்ல துணிமணிகளை தயார் செய்தான், தேவையான பணம், டாக்ஸி எல்லாவற்றையும் தயார் செய்தான்.
இப்போது வெங்கட் அவன் நண்பன் அருகில் சென்று அந்த இக்கட்டான செய்தியை சொல்லி முடிபதற்க்குள், 'பளார் ர்ர்ர்ர்ர்.' என்று கதிர் வெங்கட் கன்னத்தில் அறைந்தால். அவன் கூறியது "அடேய், நீ ஒரு நண்பனா டா.. இவ்வொலோ நேரம் இங்கேயும் அங்கேயும் ஓடி கொண்டு இருந்தீயே, இந்த செய்தியை உடனே சொல்ல வேண்டாமா டா" (என்று ஏசினான் அழுது கொண்டே) வெங்கட் தனது நண்பனிடம் "என்னை மன்னித்து விடு நண்பா, முதலில் சீக்கிரமாக புறப்படு, எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து விட்டேன், உனக்கு என் மேல் இருக்கும் கோபம் நியாயமானது தான் இருந்தும் உன் பேக்கில் கடிதத்தில் விரிவாக எழுதி உள்ளேன், நீ முதலில் புறப்படு"
என்றான்.
கதிர் சிந்தனையெல்லாம் உடனே வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்பதிலே இருந்தது. சோகம் ஒரு பக்கம் இருக்க நண்பனின் கண்ணீரை நிறுத்த முடிய வில்லையே என்று வெங்கட் கண்கள் குளமானது. கதிர் சென்று எல்லா காரியங்களையும் முடித்து இரண்டு வாரம் கழித்து தன் துணிமணிகளுடன் மீண்டும் கல்லூரிக்கு திரும்பினான், வரும் வழியில் தனது தனது நண்பன் கூறியது நினைவில் வந்தது, உடனே அந்த கடிதத்தை எடுத்து படிதான்.
அதில் கூறியதாவது;
"நண்பா, முதலில் என்னை மன்னித்து விடு, அன்று உன் அம்மாவில் இறப்பு செய்தி எனக்கு கிடைத்ததும் உடனே உன்னிடம் சொல்லி விடலாம் என்று தான் விரைந்தேன், உன் அருகில் வந்ததும் நீ பசியுடன் மதிய உணவை ருசித்துகொண்டிருப்பதை கண்டேன். உன் அம்மா எனக்கும் அம்மா தான், இருந்தாலும் இறந்த உன் அம்மா கூட உன்னை பசியோடு பார்க்க விரும்ப மாட்டாள், மேலும் நீ உன் அம்மாவின் காரியங்கள் முடியும் வரை எதுவுமே உண்ண தோணாது. இப்போது நீ உண்ணும் இந்த உணவு உன் அம்மாவில் காரியங்கள் முடியும் வரை உன்னை சோர்வடையாமல் காக்கும். இறந்த அம்மாவுக்காக பதறுகிராயே உயிருடன் இருக்கும் என் நண்பனான உன் உடல் நலம் எனக்கு முக்கியமாக பட்டது. அதனாலே நீ சாப்பிடும் தருவாயில், நீ உடனே புறப்பட எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்தேன். உன்னிடம் உடனே சொல்லி இருந்தாலும் நீ இதை தான் செய்திருப்பாய் ! "
கல்லூரியை அடைந்த கதிர், தனது நண்பன் வெங்கட் முகத்தை பார்க்கவே வெட்க்கப்பட்டான். இருப்பினும், வெங்கட் அவனே வழிய வந்து சோகத்திலிருந்து மீளும் தனது நண்பனை கட்டித்தளுவினான். கதிர், தனது நண்பனின் செயலை கண்டு வாயடைத்து நின்றான்.

This post was written by:
வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!
வணக்கம்...
ReplyDeleteதிரு வெங்கட் நாகராஜ் ஐயா தளம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...
தொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...