Breaking News
Loading...

Info Post
நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சம்.

சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
குரு - புஷ்பராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூர்யம்

நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடக் கூடாது. அதற்கென சில நாட்களை வரையறுத் திருக்கின்றனர். அதன்படி... ஞாயிற்றுக்கிழமைகளில் மாணிக்கமும், கோமேதகமும், திங்கட்கிழமைகளில் முத்தும், வைடூரியமும், செவ்வாய்கிழமைகளில் பவளமும், புதன்கிழமைகளில் மரகதமும், வியாழக் கிழமைகளில் புஷ்பராகமும், வெள்ளிக் கிழமைகளில் வைரமும், சனிக் கிழமைகளில் நீலம் வாங்குவதும், அணிவதும் சிறப்பு.

தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப்படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் தோஷநிவர்த்தி என்பர்.

இன்றைக்கு கற்கள் விற்கும் வியாபாரிகள் பலருக்கும் இதன் அவசியம் புரிவதில்லை. லாபத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். இதன் பொருட்டே அணிந்தவர் பலரும் கற்கள் தங்களுக்கு பலன் தருவதில்லை என புலம்பிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நவமணிகளின் தோஷ நிவர்த்தி செய்யும் விவரங்களை பகிர இன்றும் கூட தமிழர்கள் வீடு கட்ட துவங்கும் போது நவமணிகளை வீட்டின் தலைவாயிலில் புதைப்பதை காணலாம். இவை தவிர கோவில்களில் நவமணிகள் பெரும் அளவில் கருவறைகளிலும், கோபுர அஸ்திவாரங்களில் புதையுண்டிருப்பதாக குறிப்புகள் காணப்படுகின்றன.

இவையெல்லாம் இந்த நவமணிகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகும். நம்பிக்கை என்பதற்கு அப்பால் இதனால் உண்டாகும் பலன்களை அனுபவ ரீதியாய் உணர்ந்திருந்ததால், இதன் அருமைகளை முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் அதிர்ஷ்ட கல் வியாபாரம் என இன்று பலரும் செய்து பெரிய அளவில் பொருளீட்டிக் கொண்டிருக்கின்றனர். சில போலியான வியாபாரிகளின் மிகையான விளம்பரங்கள், தவறான வழிகாட்டுதல்களில் சிக்கி அநேகர் பணத்தையும் நிம்மதியையும் இழந்து வருகின்றனர்.

அத்தகையவர்களின் அனுபவம் இந்த கற்கள் குறித்தான அவ நம்பிக்கையையும், ஆவேசங்களையும் உருவாக்கி விட்டது. நிஜத்தில் ஒவ்வொரு ஜாதகரின் கிரக அமைப்பு, அவற்றின் சாதக பாதகங்களை வைத்து மட்டுமே நவமணிகளை பரிந்துரைக்க முடியும்.

அதாவது பிறந்த ராசி, ராசி அதிபதி, நட்சத்திரம், தசாபுத்தி, போன்றவற்றைக் கருத்தில் கொண்டே யாருக்கு எந்தவகை ரத்தினம் பொருந்தும் என்று குறிப்பிட முடியும். மற்றபடி தனியாக ஒரு ராசியையோ, நட்சத்திரத்தையோ முன்வைத்து கற்களை குறிப்பிடுதல் தவறாகும்.

இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட ரத்தின வகைகளை பொதுவாக ஆண்கள் தங்கள் வலது கை மோதிரவிரலிலும், பெண்கள் இடதுகை மோதிர விரலிலும் அணிதல் வேண்டும். சிறு குழந்தைகளாயின் கழுத்தில் அணியலாம்.

இவ்வாறு அணியும் போது அந்தக் கல்லானது உடலில் படும் வண்ணம் அமைத்துக் கொள்வதே சிறப்பு. முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு அணியப்படும் கற்கள் நல்ல பலன்களை தரும்.


author

This post was written by:

வணக்கம் நண்பர்களே, நான் முரு(சந்துரு) கணினி துறையில் படித்து முடித்தேன், நான் படித்ததை மறந்திர கூடாதென்றே இந்த வலை பதிவை துவங்கினேன். முடிந்தவரை என் தள வருகையாளர்களுக்கு மேலும் பல பயனுள்ள பதிவுகளை இட முயற்சிக்கிறேன் உங்கள் ஆதரவுடன். நன்றி
Get Free Email Updates to your Inbox!

1 comments:

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)