Breaking News
Loading...

தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் உவகை கொள்கிறோம். குறள் காலத்தால் அழியாதது என்றும் விதந்து பாராட்டுகிறோம். அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.

தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம் பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழிலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப'படுகிறார். ஒட்டுமொத்தம மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.
இற்றைக்கு பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த அதியுச்ச நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும் பொது மானுடத்திற்கும்பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட் பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனது காலத்திற்குறிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ அரசையோ ஆளம் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும் தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை தலைமகன் இல்லாதா நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும்.

தமிழ்ப் பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும் வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.

தர்மத்தின் படி இல்லறம் நடத்தி நீதி தவறாமல் பொருள் திரட்டி மனையாளோடு இன்பம் கண்டவன் முக்தி அடைவான் என்ற அர்த்தம் திருக்குறளில் தொக்கி நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. திருக்குறளைத் துருவி ஆராயும் போது அதன் ஆசிரியர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர் என்ற உண்மை புலப்படும் மனித வாழ்வின் நான்கு படிநிலைகளான திருமணமாகாத காளைப்பருவம் இல்வாழ்வு ஒடுப்பம் துறவறம் என்பனவற்றில் திருவள்ளுவருக்கு ஏற்புடமை உண்டு என்பதை 41வது குறளில் இருந்து அறியலாம் கீதையின் அடிப்படைத்தத்துவமான கர்மயோகத்திற்கு நிகரான கருத்தை 371ஆம் குறளில் காணலாம்.
வெற்றி தோல்வி பாராமல் எடுத்த கருமத்தில் முழு ஈடுபாடும் முயற்சியும்காட்டும் பணிச் சிறப்பை இந்தக் குறள் வலியுறுத்துகிறது 618ஆம் இலக்கக் குறளிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. இல்லறம் நடத்துபவன் உலக விவகாரங்களில் முழுஈடுபாடு காட்ட வேண்டும் ஒதுக்கக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.

அதே சமயத்தில் ஒரு இல்லறத்தான் வீண் விரயம் செய்யாமல் டாம்பீக மற்று வாழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். இல்வாழ்வு நல்லறமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்களை 48, 225ஆம் குறள்களில் காணலாம் பொருள் அனிதனுக்கு அடிமையாவதில்லை மனிதன் தான் பொருளுக்கு அடிமையாகிறான் என்ற கருத்தையும் திருக்குறளில் இருந்து திரட்டிக்கொள்ளலாம்.
ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறள் பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறள் பாக்கள் இருப்பது கண்கூடு பெரும்பாலான குறள் பாக்களின் முதல் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகத்திய குறள் என்று அவ்வையார் அதைப் புகழ்ந்துள்ளார்.

திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது. இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன மேற்கூறிய இராண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள் அவற்றில் செறிந்துள்ளன ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறள்பாக்களை இன்ரும் துரவி ஆய்ந்து வருகின்றனர்.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை. குறள் என்பது காரணப்பெயர் சிறியது சுரக்கமானது குறகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர். வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.

தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு. அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார். குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.

எமது காலத்தில் வாழும் கஸ்தூரி சிறினிவாசன் தவிர்ந்த பிறிதொருவராவது குறளை ஆங்கில கவிதை நடையில் மொழியாக்கம் செய்யவில்லை ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார் கஸ்தூரி சிறினிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார் ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார். இந்த ஆக்கம் வித்தியாசமானது தத்துவ விளக்கங்கள் பிற இலக்கிய ஒப்பீடுகள் போன்றவற்றையும் குறள் ஒவ்வொன்றின் மொழிப் பெயர்ப்போடு ராஜாஜி இணைத்துள்ளார்.

மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார் தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும் கிறிஸ்தவ அருட்தந்தை கொன்ஸ்ரன்ரைன் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார் பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்ததுச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார் திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்சிக் உண்டு.
இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையாதகும் திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார். தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்றிகளையும் மேற்கொண்டார் மூல நூல் களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்றிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

தமிழ் எழுத்தக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் திருக்குறளில் இன்று உயிர் எழுத்தாக கருதப்படும் (ஒள) இல்லையென்பதையும் குறளாசிரியர் (அவ்) என்ற உயிர்மெய் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அவதான்த்துள்ளார் தம்pழ் அரிச்சுவடியில் (ஒய) (ஐ) என்பன திருவள்ளுவருக்குப் பிந்திய காலத்தில் உய்ர் எழுத்துக்களாக இணைக்கப்பட்டுள்ளன இரண்டையும் அகற்றவேண்டும் என்ற அயக்கம் வலுப்பெற்று வரும் நிலையயில் திருக்குறளில் உள்ள ஆதாரம் அதற்கு உரமூட்டுவதாக அமைகிறது.

திருக்குறள் மொழிபெயர்ப்பை விட நாலடியார் 51 மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களையும் ஜி. யூ. போப் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் நாலடியார் நூல் நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுவதுண்டு நாலடி வெண்பாக்கள் நானூறைக் கொண்ட நூல் என்பது பொருள் தமிழ் நீதி நூல்களைப் பொறுத்தளவில் குறளுக்கு அடுத்த இடத்தில் நாலடியார் இருக்கிறது.

இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுரங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொறு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பன வற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்மிகக் கூடுதலான மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன தமிழர்களில் மிகச் சிறந்ததொரு ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்த புகழ் வ.வே. சு ஜயர் எனப்படும்வரகனேரி வேங்கட சப்பிரமணியம் என்பாருக்கு உண்டு தமிழ் சிறுகதை

முன்னோடிகளில் ஒருவர் என்று வ.சு.வே ஐயர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
தமிழ் மொழி ஆராய்ச்சி படைப்பிலக்கியம் கம்பராமாயண ஆய்வு மொழி பெயர்ப்புத்துறை பத்திரிக்கை துறை என்ற பல திசைகளில் அவர் ஆர்வம் காட்டினார் சங்க இலக்கியப் புலமையுடன் திருக்குறள் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார். தனது கட்டுரைகள் பலவற்றில் திருக்குறள் பாக்களை மேற்கோள்காட்டியும் விரிhவாக விளக்கியும் உள்ளார்.

ஆங்கிலம் பிரெஞ்சு ஜேர்மன் இலத்தீன் தமிழ் மொழிகளில் 1820-1886காலப்பகுதிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களை ஆய்வு செய்த பின் தனது திருக்கறள் ஆங்கில மொழி பெயர்ப்பை 1914இல் வெளியிட்டார்.
இந்த நூலுக்கு மிக நீண்ட அரிய ஆய்வுரையை அவர் எழுதினார் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வுரை அடித்தளமாக அமைகிறது. தமிழனத்தின் நாகரீக வளர்ச்சியின் உயர்வை கூறுவதோடு தமிழ் மொழியின் அன்றைய உன்னத நிலையையும் திருக்குறள் கூறி நிற்கிறது. வட மொழியின் தாக்கத்தால் உயர்ந்த தமிழ் மொழி என்ற பொய்யுரையை மறுக்கும் சான்றாதாரமாகத் திருக்குறள் விளங்குகிறது. சொல் வளமிக்க தனித்தியங்கும் திறன்மிக்க திராவிட மொழிக் குடம்பத்தின் தாயகத் தமிழ் துலங்குகிறது.

தமிழ் எல்லாவகையிலும் வட மொழிக்கு நிகரானது அல்லது உயர்வானது என்று போப் ஐயர் கூறியதை ஒவ்வொரு தமிழனும் தனது சிந்தையில் பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் இதற்குத் திருக்கறள் துணைநிற்கும்

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :D
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

Latest Posts