Breaking News
Loading...

Info Post
கண்களை பாதுக்காப்பது எப்படி ? உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணணியைத் தொடர்ந்து பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது. கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல் மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும். தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஓர் அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது உள்ளங்கைகள் இரண்டையும் நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும் போது உள்ளங்கைகளை எடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும். மேலும் இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது ஈரத் துணியை பின்பக்க கழுத்தில் போட்டு விட்டு சிறிது எண்ணெய்யை புருவங்களில் தடவி விட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும் போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும் ஓய்வும் ஒரு சேர கிடைக்கும். புருவம் என்பது கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஓர் இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால் அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணணியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால் எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்

Credit to
இன்று ஒரு தகவல்

0 comments:

Post a Comment

Give Me Your Comment... உங்கள் கருத்துகளை கூறுங்கள்.. :d
emotions
:).:)).;((.:-).=)).;(.;-(.:d.:-d.@-).:p.:o.:>).(o).[-(.:-?.(p).:-s.(m).8-).:-t.:-b.b-(.:-#.=p~.$-).(b).(f).x-).(k).(h).(c)

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.